இந்தியா, பிரேசில், அர்ஜென்டினா விமானங்களை நிறுத்தியது சவுதி அரேபியா - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 23, 2020

இந்தியா, பிரேசில், அர்ஜென்டினா விமானங்களை நிறுத்தியது சவுதி அரேபியா

கொரோனா பாதிப்பால் இந்தியாவுக்குச் செல்லும் மற்றும் வரும் அனைத்து விமானங்களையும் சவுதி அரேபியா நிறுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 56,46,010 ஐ எட்டியுள்ளது, மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கை 90,020 ஆக உயர்ந்து உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் எதிரொலியாக சவுதி அரேபியாவின் சிவில் ஏவியேஷன் பொது ஆணையம் (ஜிஏசிஏ) இந்தியாவுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களையும் நிறுத்தி வைத்துள்ளது.

இந்தியாவைத் தவிர, பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவுக்குச் செல்லும் விமானப் பயணங்களும் சவுதி அரேபியாவால் நிறுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, சவுதி அரேபியாவின் சிவில் ஏவியேஷன் பொது ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில், இந்தியா, பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கான பயணங்களை சவுதி அரேபியா நிறுத்தியுள்ளது என தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்தின் விதிகளின்படி, இந்தியாவில் இருந்து பயணிக்கும் ஒவ்வொரு பயணியும் பயணத்திற்கு 96 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனையின் அசல் கொரோனா இல்லை என்ற சான்றிதழைக் கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad