முன்னாள் அமைச்சர் சம்பிக்கவின் பிணை நிபந்தனைகளை குறைக்குமாறு கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 2, 2020

முன்னாள் அமைச்சர் சம்பிக்கவின் பிணை நிபந்தனைகளை குறைக்குமாறு கோரிக்கை

முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மூல ஆவண கோப்பை தமது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சனி டி சில்வா இன்று (02) உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியபோது, இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கிய சம்பவம் குறித்து, முன்னாள் பாட்டாலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

குறித்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தனது கட்சிக்காரர்களுக்கு பிணை தொடர்பில் விதிக்கப்பட்ட ஒரு சில நிபந்தனைகளை நீக்குமாறு, பாட்டாலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கோரிக்கையை முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்த நீதிபதி, பிரதிவாதிகளுக்கு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட பிணை நிபந்தனைகள் எவை என அறிவதற்காக, குறித்த வழக்கின் மூல ஆவணத்தை சரிபார்க்க வேண்டி உள்ளதாக தெரிவித்தார்.

இதற்கமைய, குறித்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 07ஆம் திகதி ஒத்திவைத்த நீதிபதி, மூல ஆவண கோப்பை அன்றையதினம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment