சிவப்பு யானைகளுக்கு என்ன தகுதி உள்ளது?, முன்னர் கூறிய கதையை மீண்டும் கூற ஆரம்பித்துள்ளனர் - விமல் வீரவன்ச - News View

About Us

About Us

Breaking

Friday, September 11, 2020

சிவப்பு யானைகளுக்கு என்ன தகுதி உள்ளது?, முன்னர் கூறிய கதையை மீண்டும் கூற ஆரம்பித்துள்ளனர் - விமல் வீரவன்ச

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

மரண தண்டனை கைதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பக்கூடாது என கூறுவதற்கு அனுரகுமார உள்ளிட்ட சிவப்பு யானைகளுக்கு என்ன தகுதி உள்ளதென சபையில் கேள்வி எழுப்பிய அமைச்சர் விமல் வீரவன்ச நாட்டினை சகல விதங்களிலும் நாசமாக்கி மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்கியவர்கள் இன்று எமக்கு பாடம் கற்பிக்க நினைகின்றனர் என்றார். 

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற உற்பத்தி, சுங்க, துறைமுக வரிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். 

அவர் மேலும் கூறுகையில், கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் எதிர்கட்சியினர் கூறிய பழைய கதையை மீண்டும் இன்று கூற ஆரம்பித்துள்ளனர். குடும்ப ஆட்சி உருவாகின்றது என கூறி மக்களை ஏமாற்றி ரணில் - மைத்திரி ஆட்சியை உருவாக்கியதுடன், வடக்கு கிழக்கிற்கு சமஷ்டி கிடைக்கும் என கதைகளை கூறி உருவாக்கிய ஆட்சியில் மத்திய வங்கி கொள்ளையடிக்கப்பட்டது, பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கியது, சாதாரன மக்களின் வாழ்கையை நாசமாக்கி, புலனாய்வு துறையை அவமதித்து, தற்கொலை தாக்குதலை ரசித்தவர்கள் இனியும் வேண்டாம் என கூறியே எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் ஆட்சியை கொடுத்துள்ளனர். 

இவர்களின் இன்றைய நிலையை பார்த்தால் பரிதாபமாக உள்ளது. தற்கொலை நடக்கும் வரையில் நாட்டினை ஆட்சி செய்தவர்கள், தேசிய உற்பத்தியை வீழ்த்தும் வரையில் ஆட்சி செய்தவர்கள், சர்வதேச வேலைத்திட்டங்களுக்கு ஆட்சி செய்தவர்கள் எமக்கு ஆட்சி செய்வது எப்படி என்ற பாடம் கற்பிக்க நினைகின்றனர். 

இவர்கள் இருக்கும் வேளையில் கொரோனா வந்திருந்தாள் இந்தியாவை விட மோசமான நாடாக இலங்கை மாறியிருக்கும். இன்று எமது ஆட்சியில் கொரோனா சவால்களை வெற்றி கொண்டமைக்காக சர்வதேச சுகாதார நிறுவனங்கள் புகழாரம் சூட்டுகின்றனர். 

எனவே எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் நாம் கேட்டுக்கொள்வது ஒன்று மட்டுமே. எம்மை விமர்சிக்காது உங்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சியில் இருந்து மீள என்ன செய்வது என சிந்தியுங்கள். நீங்கள் என்ன கதைகளை கூறினாலும் மக்கள் உங்கள் எவரையும் நம்பப்போவதில்லை. 

முன்னைய ஆட்சியாளர்கள் உருவாக்கிய சுயாதீன நீதிமன்றத்தின் மூலமாகவே பிரேமலால் ஜெயசேகரவை பாராளுமன்றத்திற்கு செல்ல அனுமதி கொடுத்தது. ஆனால் அதனை எதிர்த்து கருப்பு பட்டி அணிந்துகொண்டு பாராளுமன்றத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்துவதை வேடிக்கையானதாக உள்ளது. 

சட்டத்தில் வழங்கப்பட்ட உரிமையைதான் பிரேமலால் ஜெயசேகரவிற்கு கிடைத்துள்ளது. மரண தண்டனை சட்டவாக்க சபைக்கு வரக்கூடாது என சிவப்பு யானைகள் பாராளுமன்றத்தில் கத்துகின்றனர். அனுரகுமாரவிற்கு இதனை கூற என்ன தகுதி உள்ளது. 

ஜே.வி.பிக்கும் இதே குற்றச்சாட்டு உள்ளது என்பதை மறந்தவிடக்கூடாது. எனவே இந்த நாட்டினை மீட்டெடுக்க சகல விதமான தீர்மானங்களையும் முன்னெடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment