பிரதமர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை : மஹிந்த ராஜபக்ஸ - News View

Breaking

Post Top Ad

Thursday, September 10, 2020

பிரதமர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை : மஹிந்த ராஜபக்ஸ

பிரதமர் பதவியில் இருந்து விலகும் எவ்வித எண்ணமும் இல்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ இரண்டு வருடங்களில் பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வௌியாகியிருந்தாலும் அவ்வாறான எவ்வித எண்ணமும் தமக்கு இல்லையென அவர் தெரிவித்துள்ளதாக டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

தம்மை மக்கள் ஐந்து வருடங்களுக்கு தெரிவு செய்துள்ளதாகவும், பதவிக்காலம் நிறைவடையும் முன்னர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லையெனவும் பிரதமர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad