அரபு லீக் தலைமை பொறுப்பை நிராகரித்தது பலஸ்தீனம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 24, 2020

அரபு லீக் தலைமை பொறுப்பை நிராகரித்தது பலஸ்தீனம்

அரபு உடன்படிக்கையை அவமதித்து இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்தியதைக் கண்டித்து அரபு லீக் கூட்டங்களின் தற்போதைய தலைமை பொறுப்பில் இருந்து பலஸ்தீனம் விலகிக் கொண்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைன் நாடுகள் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தியது துரோகச் செயலாகக் கருதும் பலஸ்தீனம், அது பலஸ்தீன சுதந்திர நாட்டை உருவாக்குவதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக கூறுகிறது.

இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தியதற்கு அரபு லீக் மூலம் கண்டனம் வெளியிடும் பலஸ்தீனத்தின் முயற்சி இம்மாத ஆரம்பத்தில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் அடுத்த ஆறு மாதங்களுக்கு அரபு லீக் கூட்டங்களுக்கு தலைமை பொறுப்பு பலஸ்தீனத்திற்கு கிடைத்துள்ளது. எனினும் அந்தப் பொறுப்பு தமக்குத் தேவையில்லை என்று ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ரமல்லா நகரில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடு ஒன்றில் பலஸ்தீன வெளியுறவு அமைச்சர் ரியாத் அல் மாலிக்கி தெரிவித்தார்.

“லீக் கெளன்சிலின் தற்போதைய அமர்வின் தலைமை பொறுப்பை கைவிட பலஸ்தீனம் தீர்மானித்துள்ளது. (இஸ்ரேலுடன்) இராஜதந்திர உறவை ஏற்படுத்த அரபிகள் அவசரம் காட்டும்போது அதன் தலைமை கெளரவமாக இருக்காது” என்று மாலிக்கி தெரிவித்தார்.

No comments:

Post a Comment