கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் ஏழு பேரில் ஒருவர் சுகாதார துறை ஊழியர் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 19, 2020

கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் ஏழு பேரில் ஒருவர் சுகாதார துறை ஊழியர்

கொவிட்-19 (கொரோனா) நோயால் பாதிக்கப்படுவதாகப் பதிவு செய்யப்படுவோரில் ஏழு பேரில் ஒருவர் சுகாதாரத் துறை ஊழியர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த எண்ணிக்கை சில நாடுகளில் மூன்று பேருக்கு ஒன்று என காணப்படுகிறது.

வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முன்னணி ஊழியர்களுக்கு, பாதுகாப்பு அங்கிகள் தொடர்ந்து வழங்கப்படவேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியது.

அதன்மூலம் முன்னணி ஊழியர்களிடம் இருந்து மற்ற நோயாளிகளுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் வைரஸ் பரவாமல் இருக்கும் என்று அமைப்பு கூறியது.

உலக அளவில் பதிவான நோய்த்தொற்றுச் சம்பவங்களில் சராசரியாக 14 வீதத்தினர் சுகதாரத் துறை ஊழியர்களாவர். சில நாடுகளில் அது 35 வீதமாக உள்ளது.

தற்போதைய நிலவரப்படி உலக அளவில் கொவிட்-19 நோயால் சுமார் 30 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 938,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாதியர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment