ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னி தங்கியிருந்த ஹோட்டல் அறையில் அருந்திய நீரில் நச்சு கலக்கப்பட்டிருப்பதாக அவரது உதவியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளர்.
நவல்னி விமானப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் செர்பியாவின் டோம்ஸ்க் நகரில் தங்கியிருந்த ஹோட்டலிலேயே அவர் மீது நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அவரது அறையில் இருந்த தண்ணீர் போத்தலில் நோவிசோக் நச்சுப் பொருள் படிந்திருந்ததாக அவரது உதவியாளர்கள் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளனர்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆட்சிக்கு எதிராக தீவிரமாகப் போராடி வருபவர்களில் முக்கிய தலைவரான நவல்னி அதற்காக பல முறை சிறை சென்றுள்ளார்.
ஏற்கனவே அரசு ஆதரவாளர்கள் அவரை கிருமிநாசினி மூலம் கடந்த 2017ஆம் ஆண்டு தாக்கியதில் அவரது ஒரு கண் பாதிக்கப்பட்டது.
தற்போது ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வரும் நவல்னி மீண்டும் தாய் நாடு திரும்பப்போவதாக அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment