மாதுலுவாவே சோபித தேரரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தை நோக்கியே ஒன்றிணைக்கின்றது - கரு ஜயசூரிய - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 8, 2020

மாதுலுவாவே சோபித தேரரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தை நோக்கியே ஒன்றிணைக்கின்றது - கரு ஜயசூரிய

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய எச்சரிக்கை |  Virakesari.lk
(நா.தனுஜா) 

அரசியலமைப்பின் 20 வது திருத்தம் அரசியலமைப்பின் 17 வது மற்றும் 19 வது திருத்தங்களின் மூலம் உள்வாங்கப்பட்ட பல்வேறு ஜனநாயக ஆதாயங்களை திரும்பப் பெறுவதற்கு முயற்சிக்கின்றது. இப்போது ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலானது மக்களையும் அவர்கள் சார்ந்து இயங்குகின்ற இயக்கங்களையும் மாதுலுவாவே சோபித தேரரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தை நோக்கியே ஒன்றிணைக்கின்றது என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருக்கிறார். 

அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களில் நான்கைத் தவிர ஏனைய அனைத்தையும் நீக்கும் வகையில் 20 வது திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதையடுத்து, அரசியலமைப்பின் 20 வது திருத்தம் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதனூடாக 19 வது திருத்தத்தில் குறைக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் அதிகாரங்களை மீண்டும் அவருக்கே வழங்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. 

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் கரு ஜயசூரிய பின்வருமாறு கூறியிருக்கிறார்.

தறபோது முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 20 வது திருத்தம் அரசியலமைப்பின் 17 வது மற்றும் 19 வது திருத்தங்களின் மூலம் உள்வாங்கப்பட்ட பல்வேறு ஜனநாயக ஆதாயங்களை திரும்பப் பெறுவதற்கு முயற்சிக்கின்றது. 

இப்போது ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலானது மக்களையும் அவர்கள் சார்ந்து இயங்குகின்ற இயக்கங்களையும் மாதுலுவாவே சோபித தேரரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தை நோக்கியே ஒன்றிணைக்கின்றது. இந்நிலைமை வரவேற்கப்பட வேண்டியது என்பதுடன் எம்மை ஊக்குவிப்பதாகவும் இருக்கின்றது என்று குறிப்பிட்டிருக்கின்றார். 

அரசியலமைப்பின் 20 வது திருத்தம், அதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் ஊடாக அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த விடயங்களை நீக்குவதற்கு முன்மொழிகின்றது. புதிய திருத்தம் ஒரு 'தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரத்திற்கு' வழிவகுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அதனை மிகவும் கவனமாக ஆராய்வது அவசியமாகும். 

அதேவேளை பிரதமர், பாராளுமன்றம் மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான பிற நிறுவனங்களுக்கு அதிகளவான சுயாட்சி வழங்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமாகும் என்றும் அவர் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad