ஆயிரம் மடங்கு பதிலடி அளிக்கப்படும் - ஈரானுக்கு அமெரிக்க எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 15, 2020

ஆயிரம் மடங்கு பதிலடி அளிக்கப்படும் - ஈரானுக்கு அமெரிக்க எச்சரிக்கை

அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஆயிரம் மடங்கு பதிலடி அளிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அசாதாரண சூழல் நிலவி வந்தது. இதனை தொடர்ந்த கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் முக்கியப் போர் தளபதி காசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ராணுவம், ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்க ராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தியது.

அந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் படுகாயம் அடைந்தனர். மேலும் அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா ஈரான் மீது தொடுக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் இரு நாடுகள் இடையே விரிசல் மேலும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக அமெரிக்கத் தூதுவரைக் கொலை செய்ய ஈரான் திட்டமிட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு பதில் அளித்து அறிக்கை ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஆயிரம் மடங்கு பதில் தாக்குதல் அளிக்கப்படும்” என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment