முஸ்லீம் காங்கிரசின் உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைகின்றனரா? பதில் சொல்கிறார் ஹக்கீம்? - News View

About Us

About Us

Breaking

Sunday, September 27, 2020

முஸ்லீம் காங்கிரசின் உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைகின்றனரா? பதில் சொல்கிறார் ஹக்கீம்?

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணைய முயல்கின்றனர் என வெளியாகியுள்ள தகவல்களை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் நிராகரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தனக்கு தெளிவான பெரும்பான்மையுள்ளது என்பதை காண்பிப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியே இந்த தகவல்கள் வெளியாகின்றமைக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து செயற்படுவார்கள் கட்சி ஆதரவாளர்களின் நோக்கங்களை அடிப்படையாக வைத்து முடிவுகளை எடுப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

என்னால் முழு எதிர்கட்சியின் சார்பிலும் கருத்து தெரிவிக்க முடியாது என தெரிவித்துள்ள ஹக்கீம் தனது கட்சி சவாலை எதிர்கொள்ள முன்வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

மக்களை ஏமாற்றுவதற்காக அரசாங்கம் பல்வேறு தந்திரோபாயங்களை முன்னெடுக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

தினக்குரல்

No comments:

Post a Comment