வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்ட விஷம் தடவிய கடிதம் -உளவுத்துறை தீவிர விசாரணை - News View

About Us

About Us

Breaking

Saturday, September 19, 2020

வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்ட விஷம் தடவிய கடிதம் -உளவுத்துறை தீவிர விசாரணை

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி உளவுத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு ரைசின் என்ற விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகைக்கு அந்த கடிதம் சென்றடைவதற்கு முன்பாகவே, வழக்கமான சோதனையின்போது அந்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி உளவுத்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளது.

கனடாவில் இருந்து இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்காவில் விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டிரம்பை குறி வைத்து கடிதம் அனுப்பப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து டிரம்ப் நிர்வாகம் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

வெள்ளை மாளிகைக்கு இதுபோன்ற நஞ்சு பொருட்கள் அடங்கிய கடிதங்கள் அனுப்பப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கன்வே, கடந்த 2014 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு நஞ்சுப்பொருள் அடங்கிய கடிதம் அனுப்பப்பட்டது. கடிதம் அனுப்பிய நபருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

No comments:

Post a Comment