அரசாங்கத்தின் ஒரு சில செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன - குணதாச அமரசேகர - News View

About Us

About Us

Breaking

Friday, September 11, 2020

அரசாங்கத்தின் ஒரு சில செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன - குணதாச அமரசேகர

(இராஜதுரை ஹஷான்) 

அரசாங்கம் முன்னெடுக்கும் ஒரு சில செயற்பாடுகள் அதிருப்தியளிப்பதாக தெரிவித்துள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் குணதாச அமரசேகர, தவறுகளை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், பல்வேறு எதிர்பார்ப்புக்களை கொண்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். அரசாங்கம் தற்போது முன்னெடுக்கும் ஒரு சில செயற்பாடுகள் அதிருப்தியளிப்பதாக அமைகிறது. 

குறிப்பாக அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை குறிப்பிட வேண்டும். நாட்டு மக்களுக்கும், நாட்டுக்கும் பொருந்தும் விதத்தில் அரசியலமைப்பினை திருத்தம் செய்ய வேண்டுமே தவிர இரட்டை குடியுரிமையினை கொண்டவர்களுக்கு சாதகமாக அமையும் விதத்தில் ஏற்பாடுகள் கொண்டு வர கூடாது. 

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் ஏற்றுக் கொள்ள கூடிய பல விடயங்கள் காணப்பட்டாலும், புறக்கணிக்கும் பல ஏற்பாடுகளும் காணப்படுவதாகவும் கூறினார்.

No comments:

Post a Comment