யானை தாக்கி அக்கரைப்பற்று மாநகர சாரதி வைத்தியசாலையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Monday, September 28, 2020

யானை தாக்கி அக்கரைப்பற்று மாநகர சாரதி வைத்தியசாலையில் அனுமதி

நூருள் ஹுதா உமர்

அக்கரைப்பற்று மாநகர சபையின் சுகாதாரப் பிரிவில் திண்மக்கழிவகற்றும் வாகனத்தின் சாரதியாக பணியாற்றும் ஊழியரான குமார் என்பவர் இன்று (29) காலை திண்மக்கழிவுகளை கொட்டுவதற்காக அட்டாளைச்சேனை பள்ளக்காடு பிரதேசத்திற்கு சென்றிருந்தார் அப்போது அங்கு வந்த யானையின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவது மழை பெய்து வருவதால் அந்த நேரத்தில் வாகனத்தின் முன்பக்க இரு சக்கரங்களும் சேற்றில் புதையுண்ட போது திடீரென எதிர்பாராத விதமாக அங்கு வந்த யானையொன்றினால் தாக்கப்பட்டு மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

பின்னர் காயங்களுக்கு மத்தியில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில்‌ அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 

தொடர்ந்தும் யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதனால் இவ்வாறான விபத்துக்கள் அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்று வருவது வாடிக்கையாகி வருகிறது.

No comments:

Post a Comment