சிறையிலிருந்து தப்பியோடிய பெண் கைதி கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 9, 2020

சிறையிலிருந்து தப்பியோடிய பெண் கைதி கைது

களுத்துறை சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய பெண் கைதி ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து குறித்த கைதி, ஹொரண பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக, களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண், சிறைச்சாலையின் கூரையை பிரித்துக்கொண்டு நேற்று (08) பிற்பகல் தப்பியோடியிருந்தார்.

அண்மையில் குறித்த பெண் 1,300 மில்லிகிராம் ஹெரோயினுடன் களுத்துறை, பமுணுகம பிரதேசத்தில் களுத்துறை வடக்கு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, சிறைச்சாலையினுள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad