9 லட்சத்து 44 ஆயிரத்து 680 பேர் பலி - திணறும் உலக நாடுகள் - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 16, 2020

9 லட்சத்து 44 ஆயிரத்து 680 பேர் பலி - திணறும் உலக நாடுகள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 44 ஆயிரத்தை கடந்தது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் \ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 44 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலின் படி கடந்த 24 மணி நேரத்தில் 1,290 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 25 ஆயிரத்து 96 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து 2 கோடியே 17 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 44 ஆயிரத்து 680 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்
அமெரிக்கா - 2,01,321
பிரேசில் - 1,34,174
இந்தியா - 82,066
மெக்சிகோ - 71,678

No comments:

Post a Comment

Post Bottom Ad