குளவிக் கொட்டுக்கு இலக்கான குடும்பம் - 3 வயது சிறுமி மரணம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 8, 2020

குளவிக் கொட்டுக்கு இலக்கான குடும்பம் - 3 வயது சிறுமி மரணம்

Hornet attack leaves 18 injured during German wine festival | News | DW |  02.09.2018
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த நால்வர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் சிகிச்சை பலனின்றி 3 வயது சிறுமி மரணமடைந்துள்ளார்.

நொச்சிமோட்டையில் உள்ள அவர்களது விவசாய காணியில் இன்று (08) மதியம் 12.30 மணியளவில் குளவி கொட்டுக்குள்ளான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விவசாய காணியினை சுத்தம் செய்வதாக ஒரே குடும்பத்தினை சேர்ந்த தாய், இரு குழந்தைகளுடன் அவரின் மகளும் சென்றுள்ளனர். காணியில் இருந்த மரம் ஒன்றினை வெட்டிய சமயத்தில் மரத்தினுள் காணப்பட்ட குளவிக்கூடு கலைந்து குளவிகள் அவர்கள் நால்வர் மீது கொட்டியுள்ளது.

குளவிக் கொட்டுக்கு இலக்காகிய அவர்கள் அயலவர்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். தாய் (வயது- 61), மகள் (வயது-36), மகளின் பிள்ளைகள் (வயது -03), (வயது- 3மாதம்) ஆகியவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரப்பட்டது.

இந்நிலையில் 6 ஆம் வாட்டில் அனுமதிப்பட்டிருந்த 3 வயது சிறுமி இன்று (08) மாலை 6.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படுகாயமடைந்த தாய், மகள், மகளின் 3மாத குழந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வவுனியா தீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad