இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டியில் கிறிஸ் கெயில், சஹிட் அப்ரிடி பங்கேற்பு - News View

About Us

About Us

Breaking

Monday, September 14, 2020

இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டியில் கிறிஸ் கெயில், சஹிட் அப்ரிடி பங்கேற்பு

இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டியில் கிறிஸ் கெயில், சஹிட் அப்ரிடி, டேரன் சமி, டேரன் பிராவோ உள்ளிட்ட பல சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

ஓகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 20 வரை இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டி நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை முதலில் அறிவித்தது. பின்னர் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான நிர்வாகக் காரணங்களால் போட்டியைக் கடந்த மாதம் ஒத்திவைத்தது.

இந்நிலையில் நவம்பர் 14 முதல் டிசம்பர் 6 வரை எல்.பி.எல் எனப்படும் இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான வீரர்களைத் தேர்வு செய்யும் எல்.பி.எல் ஏல நிகழ்வு ஒக்டோபர் 1 அன்று நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்க கிறிஸ் கெயில், டேரன் சமி, டேரன் பிராவோ, சஹிட் அப்ரிடி, ஷகிப் அல் ஹசன், ரவி பொபாரா, கொலின் மன்ரோ, பிளாண்டர், முனவ் படேல் ஆகிய சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

கொழும்பு, கண்டி, காலி, தம்புள்ளை, யாழ்ப்பாணம் என ஐந்து அணிகள் இப்போட்டியில் பங்குபெற உள்ளன. 23 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

ஒவ்வொரு அணியும் ஆறு வெளிநாட்டு வீரர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். ஆட்டத்தின்போது நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஓர் அணியில் அனுமதிக்கப்படுவார்கள்.

30 சர்வதேச மற்றும் 65 உள்ளுர் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள்.

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என இலங்கை அரசு கட்டளையிட்டதால் வேறுவழியில்லாமல் இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டி கடந்த மாதம் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்தமுறை வெளிநாட்டு வீரர்கள் ஏழு நாட்களுக்கு மட்டும் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்குமாறு இலங்கை அரசிடம் இலங்கை கிரிக்கெட் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment