20 ஆவது திருத்தத்தின் மூலம் தனது பிரதமரின் அதிகாரங்களை பறித்துள்ள ஜனாதிபதி - மரிக்கார் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 6, 2020

20 ஆவது திருத்தத்தின் மூலம் தனது பிரதமரின் அதிகாரங்களை பறித்துள்ள ஜனாதிபதி - மரிக்கார்

முஸ்லிம்கள் பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள் - அவர்கள் மீது சந்தேகம் கொள்ள  வேண்டாம்: எஸ்.எம்.மரிக்கார் - Tamilwin
(செ.தேன்மொழி) 

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி அவரது சகோதரரான பிரதமரின் அதிகாரங்களை பறித்துக் கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

இதேவேளை 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றினால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்திற் கொண்டு, இந்த திருத்தத்திற்கு விருப்பமின்றி ஆளுந்தரப்புடன் செயற்பட்டுவரும் உறுப்பினர்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். 

பிரதமருக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களை ஜனாதிபதி பெற்றுக் கொண்டு பிரதமரை ஒரு நாம நிர்வாகியாக 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முயற்சித்துள்ளார். 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சிக் காலத்தில் எவ்வாறு முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்னவை நடத்தினாரோ, அவ்வாறே அவரது சகோதரனே அவருக்குள்ள அதிகாரங்களை பறித்துக் கொண்டுள்ளதாவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment