20 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற அவசரப்படுவதற்கு எவ்வித காரணங்களும் இல்லை - முன்னாள் சபாநாயகர் கரு - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 15, 2020

20 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற அவசரப்படுவதற்கு எவ்வித காரணங்களும் இல்லை - முன்னாள் சபாநாயகர் கரு

(நா.தனுஜா) 

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற அவசரம் காண்பிப்பதற்கு எவ்வித நியாயமான காரணங்களும் இல்லை. எனவே அது குறித்து ஆராய்வதற்காக பிரதமரால் நியமிக்கப்பட்ட மீளாய்வுக்குழு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருக்கிறார். 

அரசியலமைப்பின் 20 வது திருத்தம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் மீளாய்வுக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. 

எனினும் அந்தக் குழு மேலும் விரிவாக்கப்பட வேண்டும் என்று தனது டுவிட்டர் பதிவொன்றின் மூலம் கரு ஜயசூரிய வலியுறுத்தியிருக்கிறார். 

முன்மொழியப்பட்ட வெள்ளைக் காகிதமாக உள்ள அரசியலமைப்பின் 20 வது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமரினால் நியமிக்கப்பட்ட மீளாய்வுக்குழு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். 20 வது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ள அவசரப்படுவதற்கு எவ்வித நியாயமான காரணங்களும் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். 

நாடொன்று சமத்துவம் மற்றும் சுபீட்சம் ஆகியவற்றை நோக்கிப் பயணப்படுவதை உறுதி செய்வதற்கு ஜனநாயக கட்டமைப்புக்கள் மிகவும் அவசியமானவையாகும் என்றும் கரு ஜயசூரிய தனது பதிவில் வலியுறுத்தியிருக்கிறார். 

அதேவேளை 20 வது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம் பெரிதும் வரவேற்பதாகக் குறிப்பிட்டிருக்கும் அவர், இதன்போது அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்களின் கருத்துக்களை மாத்திரமன்றி அரசாங்கத்திற்கு வாக்களிக்காத 6.2 மில்லியன் பேரின் கருத்துக்களையும் செவிமடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

No comments:

Post a Comment