வடக்கில் கொவிட் 19 பரவாமல் தடுக்க கரையோர கண்காணிப்பு அவசியம், இந்தியாவிலிருந்து ஊடுருவலாம் என்கிறார் வைத்தியர் கேதீஸ்வரன் - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 9, 2020

வடக்கில் கொவிட் 19 பரவாமல் தடுக்க கரையோர கண்காணிப்பு அவசியம், இந்தியாவிலிருந்து ஊடுருவலாம் என்கிறார் வைத்தியர் கேதீஸ்வரன்

யாழில் கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வட பகுதிக்கு வருபவர்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டுமென வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் அதிகளவில் காணப்படுகின்றது யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளிற்கு இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வருபவர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

கடற்கரையை அண்டிய பகுதியில் இலங்கை கடற்படையினரால் விசேட ரோந்து, கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இதனடிப்படையில் அண்மையில் தொண்டமானாறுப் பகுதியில் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வந்திறங்கிய 08 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஆனால் இன்னும் எத்தனை பேர் இவ்வாறு சட்டவிரோதமாக வருகை தந்துள்ளார்கள் என்பது தொடர்பில் ஒரு கேள்வி உள்ளது.

இது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநராலும் எமக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது இந்த விடயம் தொடர்பில் கடற்படையினரின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கின்றது மாவட்ட ரீதியில் நேரடியான தொடர்புகளை பேணி வருகின்றனர்.

பருத்திதுறை விசேட நிரூபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad