19 மாத பெண் குழந்தை முகக் கவசம் அணியாததால் விமான சேவை ரத்து - News View

About Us

About Us

Breaking

Thursday, September 10, 2020

19 மாத பெண் குழந்தை முகக் கவசம் அணியாததால் விமான சேவை ரத்து

கனடாவில் 19 மாத பெண் குழந்தை முகக் கவசம் அணியாத காரணத்தால் விமான சேவை ரத்தான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கனடாவில் கல்கரி நகரத்தில் இருந்து டொராண்டோ நகருக்கு வெஸ்ட்ஜெட் விமானம் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் சப்வான் சவுத்ரி என்ற பயணி தனது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் ஏறி இருந்தார். 

ஆனால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. அனைத்து பயணிகளும் தர்ம சங்கடத்துக்கு ஆளாகினர். இதற்கு காரணம், தனது இளைய குழந்தை (19 மாத பெண் குழந்தை) முகக் கவசம் அணிந்தே ஆக வேண்டும் என்று விமான நிறுவனம் கட்டாயப்படுத்துவதுதான் என்று சவுத்ரி கூறினார். 

மேலும், விமானம் புறப்படுவதற்கு முன் தனது 3 வயது மகள் முகக் கவசம் அணியாமல், தின்பண்டம் சாப்பிட்டு கொண்டிருந்ததாகவும், குழந்தை சாப்பிட்டு முடிப்பதை கூட சகித்துக் கொள்ளாமல் விமான சிப்பந்திகள், குழந்தை முகக் கவசம் அணியாவிட்டால், விமானத்தின் கதவுகளை மூட முடியாது என மறுத்து விட்டதாகவும் கூறினார்.

அதைத் தொடர்ந்து சவுத்ரியும் குழந்தைக்கு முகக் கவசம் அணிவிக்க சம்மதித்தார். அவரது 3 வயது மகள் முகக் கவசம் அணிந்து விட்டாள். ஆனால் 19 மாத குழந்தைதான் அணியவில்லை என கூறப்படுகிறது. 

இதற்கிடையே நடந்த நிகழ்வுகளை பார்த்த அந்த குழந்தை வாந்தியெடுத்தது. இதில் ஆத்திரம் அடைந்த விமான சிப்பந்திகள், தீவிரமாயினர். அந்த குடும்பத்தினரை விமானத்தை விட்டு வெளியேறுமாறு கூறினர். அப்படி அவர்கள் வெளியேறாவிட்டால் கைது, வழக்கு, தண்டனை என நடவடிக்கை நீளும் என எச்சரித்ததுடன், பொலிசாரையும் வரவழைத்தனர். 

அதைத் தொடர்ந்து தாங்கள் மரியாதைக்குரியவர்கள் என்று கூறி சவுத்ரி குடும்பத்தினர் வெளியேற சம்மதித்தனர். ஆனால் விமான சிப்பந்திகளோ விமானத்தை இயக்கும் மன நிலையில் இல்லை என கூறி விட்டனர். இதற்கிடையே பொலிசார் வந்து விமானத்திற்குள் இருந்த அனைத்து பயணிகளையும் வெளியேற்றினர். விமான சேவையும் ரத்தானது. 

இருப்பினும் கனடாவில் கொரோனா கட்டுப்பாட்டு விதியின்படி 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முகக் கவசம் அணிந்தால் போதும் என தெரிய வந்துள்ளதாக சவுத்ரி தெரிவித்தார். ஆனால் விமான நிறுவனமோ, 3 வயது குழந்தை முகக் கவசம் அணியாமல் இருந்ததுதான் பிரச்சினைக்கு வழிவகுத்தது என கூறியது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment