சீன ஜனாதிபதியை விமர்சித்த தொழில் அதிபருக்கு 18 வருட சிறைத் தண்டனை - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 22, 2020

சீன ஜனாதிபதியை விமர்சித்த தொழில் அதிபருக்கு 18 வருட சிறைத் தண்டனை

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கொரோனா தொற்றை கையாண்டதை விமர்சித்த தொழில் அதிபருக்கு 18 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கையாண்டதை விமர்சித்த சீன கோடீஸ்வரருக்கு ஊழல் குற்றச்சாட்டில் 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று சீன நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சீன மூத்த அதிகாரிகளுடன் நெருங்கிய உறவைக் கொண்ட ஓய்வு பெற்ற ரியல் எஸ்டேட் அதிபர் ரென் ஷிகியாங் மார்ச் மாதத்தில் திடீரென மாயமானார். 

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கொரோனா தொற்றை கையாண்டதை விமர்சித்தவர் ரென் ஷிகியாங். அதே மாதத்தில் ஒரு மோசமான கட்டுரை எழுதியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் மீது ஊழல் தொடர்பான குற்றங்கள் சுமத்தப்பட்டன.

கடந்த செவ்வாயன்று, பெய்ஜிங்கில் உள்ள ஒரு நீதிமன்றம், பொது நிதியில் சுமார் 3 16.3 மில்லியன் (110.6 மில்லியன் யுவான்) மோசடி, லஞ்சம் வாங்குதல், மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் ரென் குற்றவாளி எனக் கண்டறிந்தது.

நீதிபதிகள் அவருக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து 620,000 டொலர் (4.2 மில்லியன் யுவான்) அபராதம் விதித்தனர். நீதிமன்றம் "அவர் செய்த குற்றங்கள் அனைத்தையும் தானாக முன்வந்து ஒப்புக்கொண்டதாக கூறி உள்ளது.

69 வயதான ரென் பெரும்பாலும் சீன அரசியலைப் பற்றி வெளிப்படையாகப் பேசினார், பொதுவாக சர்வாதிகார அரசில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக பேசினார். அவரது நேர்மை அவருக்கு சீன சமூக ஊடகங்களில் "தி கேனான்" என்ற பெயரை பெற்றுத்தந்தது.

No comments:

Post a Comment