முகப்புத்தக களியாட்டத்தில் போதைப் பொருட்களுடன் சிக்கிய 16 பேர் கைது - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 22, 2020

முகப்புத்தக களியாட்டத்தில் போதைப் பொருட்களுடன் சிக்கிய 16 பேர் கைது

மாதுரு ஓயா பகுதியிலுள்ள விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகப்புத்தக களியாட்ட விருந்திற்கு சென்ற 16 இளைஞர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பொலன்னறுவை போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்களிடமிருந்து ஒருவகை போதைப் பொருள் 33, 17 கிராம், கஞ்சா, போதைப் பொருள் அடங்கிய சுருட்டுக்கள் 11, சங்கீத உபகரணங்கள், வேன், சிறிய ரக கெப் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

அம்பாறை, கண்டி, பொலன்னறுவை, பெதிவௌ மற்றும் செவனப்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

முகப்புத்த நண்பர்கள் இடையேயான இந்த களியாட்ட விருந்து மாதுரு ஓயா பகுதியிலுள்ள விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய சந்தேக நபர்கள் களியாட்ட விருந்திற்கு சென்ற நிலையிலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad