காணாமலாக்கப்பட்டோர் இலங்கை பிரஜைகளே, அரசாங்கத்தின் அலட்சியம் கவலையளிக்கிறது - காவிந்த ஜயவர்தன - News View

About Us

Add+Banner

Breaking

  

Monday, August 31, 2020

demo-image

காணாமலாக்கப்பட்டோர் இலங்கை பிரஜைகளே, அரசாங்கத்தின் அலட்சியம் கவலையளிக்கிறது - காவிந்த ஜயவர்தன

kavintha
(இராஜதுரை ஹஷான்)

வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் முன்னெடுக்கும் போராட்டத்தை அரசாங்கம் அலட்சியப்படுத்துவது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை அவமதிப்பதாகவே கருதப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் முன்னெடுக்கும் பேராட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு உடனடியாக வெளிப்படுத்தப்பட வேண்டும் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் கருத்துரைப்பேன்.

சர்வதேச காணாமல்போனார் தினத்தை முன்னிட்டு காணாமல்போனோரது உறவுகள் முன்னெடுத்த போராட்டங்களை அரசாங்கம் அலட்சியப்படுத்தவது எதிர்பார்க்க கூடியது. ஆனால் அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தாமல் இருப்பது கவலைக்குரியது.

வலிந்து காணாமலாக்கபட்டோர் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பற்ற விதமாகவே செயற்படுகிறது. 30 வருட கால யுத்தத்தில் காணாமல்போனோர் பிற நாட்டவர்கள் அல்ல. அனைவரும் இலங்கை பிரஜைகள் என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். யுத்த காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் உண்மை சம்பவங்களை அறிந்துகொள்ளும் உரிமை பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உள்ளது.

காணாமல் போனோர் தொடர்பில் முறையான நடவடிக்கைகளை முன்னெடுக்க கடந்த அரசாங்கத்தில் காணாமல்போனோர் அலுவலகத்தை நிறுவி. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.

காணாமல் போனோர் அலுவலக விவகாரத்தை பொதுஜன பெரமுனவினர் தங்களின் இனவாத அரசியலுக்கு முழுமையாக பயன்படுத்தி பெரும்பான்மை மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்து பயன் பெற்றுக் கொண்டார்கள்.

தமிழ் அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் அமைதி காப்பது அவர்கள் தமிழ் மக்களுக்கு இழைக்கும் அநீதியாகவே கருதப்படும். அமைச்சு பதவிகளை பாதுகாத்துக்கொள்ள தமிழ் மக்களின் போராட்டங்களை அலட்சியப்படுத்த வேண்டாம் என்றார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *