எஸ்.எப். லொக்கா சுட்டுக் கொலை - கார் தீப்பிடிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 5, 2020

எஸ்.எப். லொக்கா சுட்டுக் கொலை - கார் தீப்பிடிப்பு

எஸ்.எப். லொக்கா என அழைக்கப்படும் இரோன் ரணசிங்க சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரத்தின் தம்புத்தேகம, தஹய்யாகம சந்தியில் இன்று (05) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார்.

இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை தொடர்ந்து அவர் பயணித்த காரும் தீப்பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர், அநுராதபுரம், கடபனஹவிலுள்ள பனோரமா இரவு விடுதியின் உரிமையாளரும் கராத்தே வீரருமான வசந்த சொய்சா கொலை வழக்கின் பிரதான சந்தேகநபராவார்.

கராத்தே வீரரான வசந்த சொய்சா கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் 24ஆம் திகதி அவரது விடுதியில் வைத்து அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார். இச்சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டிருந்தார்.

No comments:

Post a Comment