காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் கடும் மழை பெய்வதற்கான சாத்தியம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 5, 2020

காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் கடும் மழை பெய்வதற்கான சாத்தியம்

சென்னையில் கடும் மழை: மக்கள் ...
நாட்டில் காற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இன்று (06) கடும் மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பேருவளையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்தை அண்டிய பகுதிகளில் உயர் அலைகள் காரணமாக கடல் அலைகள் கரையை அண்டிய நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment