ஜனாஸா எரிப்புக்கு எதிராக ரவூப் ஹக்கீம் பேசியதற்கு பொங்கியவர்கள் நேற்று எங்கே போனார்கள்? - News View

Breaking

Post Top Ad

Tuesday, August 25, 2020

ஜனாஸா எரிப்புக்கு எதிராக ரவூப் ஹக்கீம் பேசியதற்கு பொங்கியவர்கள் நேற்று எங்கே போனார்கள்?

கொரோனா நோயாளியின் ஜனாஸா ...
பிரபஞ்சத்தில் கேவலமான மனிதர்கள் எம்மிடையேதான் இருக்கிறார்கள் என தோன்றுகிறது.!

முன்னைய சம்பவம் ஒன்றை இங்கே ஞாபகப்படுத்துகிறேன்.

மார்ச் மாதம் 31ம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹக்கீம் அவர்கள் ஜனாசா எரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தனது முகப்புத்தகத்தில் பெரியதொரு கட்டுரைய பதிந்திருந்தார்.

அந்த பதிவில், மிகக்கேவலமாக அவரை திட்டி, ஜனாஸா எரிப்பதை ஒரு சிலர் நியாயம் காட்டியும், இன்னும் சிலர் "நீங்கள் வாயை மூடுங்கள், நாங்கள் பார்க்கிறோம்" என்றும் சில பின்னூட்டங்களை இங்கு பதிய முடியாதவாறும், இட்டிருந்தனர்.

இன்னொரு சம்பவம்!
மருதானையைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணமடைய அவரை அடக்கம் செய்ய ஜாவத்தை பள்ளியில் கப்ர் வெட்டப்பட்ட போது, அந்த மையத்தை நாங்கள்தான் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தோம், என் கட்சி தலைவர்தான் அதனை செய்தார், ஏக தலைவன், முஸ்லிம்களின் தலைவர் என புகழ்பாடி, ஒரு சில மணித்தியாலங்களில் அந்த மையத்தை எரித்த பிறகு மொத்த பழியையும் மூன்றாவதாக இருந்த நபர்கள் மீதும், ஆளும் கட்சி, எதிர்க் கட்சிக்கும், எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியையும் மிகக்கடுமையாக வசை பாடி திரிந்ததை நீங்கள் கண்டிருப்பீர்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

◾இன்று கொரோனா தொற்று ஏற்பட்ட ஒருவர் மரணமடைந்தார். மார்ச் 31ம் திகதி ஹக்கீமின் முகப்புத்தக பதிவுகளில் பொங்கிய, முகப்புத்தக நேரலையில் போராடிய பலர் இன்று எரிக்கப்பட ஜனாசா பற்றி ஒர் வசனமேதும் பேசவில்லை.

◾அப்படித்தான் ஒரு சிலர் இலேசாக பதிவுகளில் பட்டும் பாடாமல் ஏதாவது கூறினாலும், தான் ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், வேட்பாளர்கள், கட்சியோடு சம்பந்தப்பட்டவர்களை (இன்றைய ஆளும்கட்சி) இதோடு எந்த விதத்திலும் சம்பந்த படுத்தாமல் வியாக்கனம் பேசுவதை காணலாம்.

இது எல்லாவற்றையும் விட, அன்று ஜனாஸா எரிப்புக்கு ஹக்கீமையும், ரிஷாதையும், அசாத் சாலியையும், குறை கூறிய பலர், நாங்கள் அதிகாரத்தில் இருந்திருந்தால் இப்படி செய்ய விடுவோமா என கூறிய பலர், இன்று மையத்து எரிக்கப்பட்டதை கண்டும் காணாமல் இருக்கின்றனர்.!

இப்பொழுது சொல்லுங்கள், பிரபஞ்சத்தில் கேவலமானவர்கள், மையத்திலும் அரசியல் செய்தவர்கள் யார் என்று!?

Azeem Jahufer
23.08.2020

No comments:

Post a Comment

Post Bottom Ad