தெரிவுசெய்யப்பட்ட இடங்களுக்கு விமான சேவைகளை முன்னெடுக்க தீர்மானம்! - News View

Breaking

Post Top Ad

Friday, August 28, 2020

தெரிவுசெய்யப்பட்ட இடங்களுக்கு விமான சேவைகளை முன்னெடுக்க தீர்மானம்!

சென்னை சென்ற இலங்கை விமானம் திருப்பி அனுப்பப் பட்டுள்ளது..! |  importmirror.com
தெரிவுசெய்யப்பட்ட இடங்கள் சிலவற்றுக்கு தொடர்ச்சியான விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக, ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

இதற்கமைய இத்தாலியின் மிலான், ஐக்கிய இராச்சியத்தின் லண்டன், ஜப்பானின் டோக்கியோ, மாலைதீவின் மாலே, ஜேர்மனியின் பிராங்பேர்ட், பிரான்ஸின் பரிஸ், அவுஸ்திரேலியாவின் சிட்னி ஆகிய இடங்களுக்கு விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

குறித்த இடங்களுக்கு விமான பயணங்களை மேற்கொள்ள விரும்பும் விமான பயணிகள், ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் காலி, கண்டி, கொழும்பு அலுவலகங்களின் ஊடாகவோ அல்லது, குறித்த விமான சேவையின் இணையத்தளத்தின் ஊடாகவோ ஆசனங்களை முன்பதிவு செய்துகொள்ளலாம் என, ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad