அரசியலமைப்பு பேரவையில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக மஹிந்தானந்த - சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை மாற்ற முடியாது - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 26, 2020

அரசியலமைப்பு பேரவையில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக மஹிந்தானந்த - சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை மாற்ற முடியாது

விசாரிக்க வேண்டியவர்களை ...
அரசியலமைப்பு பேரவையில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமவை தனது பிரதிநிதியாக நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.

10 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு சபைக்கு பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோர் பதவி ரீதியாக உள்ளீர்க்கப்படுவார்கள்.

இருப்பினும் பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்னும் பெயரிடப்படவில்லை.

கடந்த அரசாங்கத்தின்போது நியமிக்கப்பட்ட ஜாவிட் யூசுப் மற்றும் பேராசிரியர் நாகநாதன் செல்வகுமார் ஆகியோர் தொடர்ந்து அரசியலமைப்பு சபையின் சிவில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்.

இருப்பினும், கலாநிதி ஜயந்த தர்மபாலா பதவி விலகியதன் மூலம் ஏற்பட்ட வெற்றிடம் இன்னும் நிரப்பப்படவில்லை.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த போதிலும், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை மாற்ற முடியாது என்பதோடு, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்திற்கு அமைய, அவர்கள் நியமிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் வரை அவர்களை நீக்க முடியாது என்று ஒரு பிரிவு உள்ளது என்பதே இதற்குக் காரணம்.

இதேவேளை, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நாடாளுமன்ற செயலமர்வு இன்று இரண்டாவது நாளாக நடைபெறுகின்றது.

பாராளுமன்ற நூலகத்தைப் பயன்படுத்துவது மற்றும் பாராளுமன்ற குழுக்கள் தொடர்பான விடயங்கள் குறித்து இன்று தெளிவுபடுத்தப்படவுள்ளன.

No comments:

Post a Comment