சீனா புதிய செயற்கை கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது - News View

About Us

About Us

Breaking

Monday, August 24, 2020

சீனா புதிய செயற்கை கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

சீனா புதிய ஆப்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கை கோளை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

அந்த நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜியுவான் செயற்கை கோள் ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 10.27 மணிக்கு சீனா செயற்கை கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

‘காபென்9 05’ என்ற அந்த செயற்கை கோள் ‘மார்ச்2 டி கேரியர்’ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கை கோள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த செயற்கை கோள் நில அளவீடுகள், நகர திட்டமிடல், வீதிகள் வடிவமைப்பு, பயிர் விளைச்சல் மதிப்பீடு, பேரழிவு தடுப்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகளுக்கு இந்த செயற்கை கோள் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment