கேலிக்கூத்தாகும் ஜனநாயகம், கேள்விக்குட்படும் அரசியலமைப்பு - தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டு - News View

About Us

About Us

Breaking

Saturday, August 15, 2020

கேலிக்கூத்தாகும் ஜனநாயகம், கேள்விக்குட்படும் அரசியலமைப்பு - தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டு

தமிழர் விடுதலைக்கூட்டணியின் ...
இலங்கையில் ஜனநாயகம் கேலிக்கூத்தாகியுள்ளதோடு அரசியலமைப்பு கேள்விக்குட்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார்.

19ஆவது திருத்தத்தினை மீறி பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி பதவி வகிக்கலாமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், பௌத்த தேசியவாத சிந்தனையுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ள ராஜபக்ஷ குடும்பம், தொடக்கத்திலேயே பல ஜனநாயகப் படுகொலையை மேற்கொள்கின்றது.

19ஆவது திருத்ததின் 51ஆவது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி அமைச்சு பதவி வகிக்க முடியாது என கூறப்பட்டுள்ளது. அதையும் மீறி தற்போது ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை தன்வசம் ஆக்கிள்ளார். இது நல்லாட்சி தத்துவமற்ற அரசியலைமைப்பை மீறும் ஜனநாயகப் படுகொலையாகும். 

தற்போது 19ஆவது சரத்தை நீக்கப்போவதாக அரசு கூறுகின்றது. அவ்வாறு சில சரத்துக்கள் நீக்கப்பட்டாலும் கூட 19ஆவது திருத்தத்திற்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அந்தச் சட்டத்திற்குட்பட்டவரே ஆகும்.

ஆகவே இந்த 19ஆவது திருத்தத்தை வரைவதில் முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி, ஜெயம்பதி, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் போன்றோர் நல்லாட்சி அரசைப் பாதுகாக்க நீதிமன்றம் சென்றது போல் இந்த அரசியலமைப்பு மீறலுக்கு எதிராக ஏன் நீதிமன்றம் போக தயங்குகிறார்கள்? 

இது மாத்திரமன்று அமைச்சரவையில் முக்கிய துறைகள் ராஜபக்ச குடும்பத்திடம் சிறுபான்மையினர் ஒரு சிலர் மட்டுமே. தேசிய கொடியில் சிறுபான்மையினர் அடையாளங்கள் அகற்றப்பட்டுள்ளன.

அமைச்சுக்களின் செயலாளர்களில் ஒருவர் கூட தமிழ் பேசுபவர் இல்லை, நால்வர் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள், பௌத்த பீடங்களில் பதவி ஏற்பு, மிகத் தீவிரமான இனவாதிகளுக்கு முக்கிய அமைச்சுப் பொறுப்புக்கள்.

செஞ்சோலைப் படுகொலை நினைவு கூரலுக்கு தடை விதிக்கப்பட்டள்ளது. அதேபோல் எதிர்காலத்தில் முள்ளிவாய்க்கால் நினவேந்தல், மாவீரர் தினம், தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் போன்ற நிகழ்வுகளையும் கூட தடை செய்ய வாய்ப்புண்டு.

பௌத்த தேசிய வாதத்தையே மூலதனமாகக் கொண்டு மேட்டிமைவாத சர்வதிகார போக்கில் ஆட்சியாளர்கள் செயற்படுகின்றார்கள். அபிவிருத்திக்கும், வேலை வாய்ப்பிற்கும் என கொள்கையின்றி அரசிற்கும் அரசு சார்புடையவர்களுக்கும் வாக்களித்த தமிழர்கள் இனியாவது சிந்திப்பார்களா? 

படித்தவர்கள் கூட பகிரங்கமாக ஆதரித்தார்கள் தமிழர் தேசத்தில் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பிற்கு ஆதரவாகவா எனும் கேள்வி எழுகிறது? ஆகவே இவ்வாறான ஜனநாயகப் படுகொலைக்கு எதிராக அணிதிரள வேண்டியது அனைவரினதும் கடமையாகும் என்றுள்ளது.

No comments:

Post a Comment