நான் அமைச்சுப் பதவியிலிருந்து விலகத் தயார் - டலஸ் அழகப்பெரும - News View

About Us

About Us

Breaking

Sunday, August 23, 2020

நான் அமைச்சுப் பதவியிலிருந்து விலகத் தயார் - டலஸ் அழகப்பெரும

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது ...
நாட்டின் மின் வெட்டுக்கு மின் சக்தி அமைச்சே பொறுப்புக்கூற வேண்டும் என்று உறுதியானால் நான் அமைச்சுப் பதவியிலிருந்து விலகத் தயார் என்று மின் சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை நாட்டில் ஏற்பட்ட திடீர் மின் வெட்டு தொர்பில் ஆராய்வதற்கு மின் சக்தி அமைச்சினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்த குழுவின் அறிக்கையானது நாளை மாலை மின் சக்தி அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளது, இந்த அறிக்கையில் திடீர் மின் வெட்டுக்கு மின் சக்தி அமைச்சுதான் பொறுப்பு என்று மேற்கொள் காட்டினால் தான் உடன் பதவி விலகத் தயராகவுள்ளதாக டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

மின் சக்தி அமைச்சுதான் இதற்கு பதிலளிக்க வேண்டுமாக இருந்தால், அமைச்சுப் பதவியை ஏற்றதிலிருந்து நான் 96 மணித்தியாலங்களே இருந்துள்ளேன். மின் சக்தி அமைச்சே தவறுக்கு காரணம் என்றால், செவ்வாய்க்கிழமையிலிருந்து நான் அல்ல மின் சக்தி அமைச்சிற்கு வேறு ஒருவர் அமைச்சராக இருப்பார். அவ்வாறான எடுத்துக்காட்டு இலங்கையில் முதற்தடவையாகப் பதிவாகும் என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment