அங்கஜன், அதாவுல்லாவுக்கு அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டும், தமிழர்கள் அரசாங்கத்தை ஆதரிக்க ஆரம்பித்து விட்டனர் - அமைச்சர் விமல் வீரவன்ச - News View

About Us

About Us

Breaking

Monday, August 24, 2020

அங்கஜன், அதாவுல்லாவுக்கு அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டும், தமிழர்கள் அரசாங்கத்தை ஆதரிக்க ஆரம்பித்து விட்டனர் - அமைச்சர் விமல் வீரவன்ச

அமெரிக்கா மீது விமல் வீரவன்ச ...
(ஆர்.யசி)

சம்பந்தனையும், விக்கினேஸ்வரனையும் தாண்டி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளதானது தமிழ் மக்கள் பிரிவினைவாத கொள்கையில் இருந்து விடுபட்டு தேசிய அரசியலில் காலடி எடுத்து வைக்க ஆரம்பித்துவிட்டனர் என்பது தெட்டத்தெளிவாக வெளிப்படுத்துகின்றது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அங்கஜனுக்கு அமைச்சுப் பதவி கொடுத்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.

நிகழ்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், சம்பந்தனை விடவும் மோசமான விதத்தில் தமிழ் தேசிய உரிமையாளராக மாற வேண்டும் என்பதே விக்கினேஸ்வரனின் நோக்கமாக உள்ளது. ஏனென்றால் விக்கினேஸ்வரனுக்கு வடக்கு கிழக்கு பூமியில் தேசியம் பேச எந்த உரிமையும் இல்லை, அவர் கொழும்பு 7 இல் பிறந்து வளர்ந்து கல்வி கற்றவர். 

அவரது இரு பிள்ளைகளையும் சிங்களவர்களுக்கு திருமணம் முடித்துக் கொடுத்துள்ளார். தமிழ் மொழி மூத்த மொழி, தமிழே தனது மூச்சி, தமிழே அவரது பேச்சு என பாராளுமன்றத்தில் கூறுவது உண்மையென்றால் என்ன நோக்கத்தில் தனது பிள்ளைகளை சிங்களவர்களுக்கு திருமணம் முடித்துக் கொடுத்தார்.

அவர்களின் உடலில் இல்லாத இனவாதத்தை வேண்டுமென்றே உருவாக்கி விக்கினேஸ்வரன் இனவாத கருத்துக்களை முன்வைக்கின்றார். இவ்வாறு பேசி தமிழ் மக்களை குழப்பிவிட்டால் தான் சம்பந்தனை மிஞ்சிய வீரராக முடியும் என விக்கினேஸ்வரன் நினைக்கின்றார். 

இன்று வடக்கில் தமிழ் மக்கள் தமிழ் இனவாதத்தை நிராகரிக்கின்றனர். 16 பேராக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலம் இன்று 10 ஆக குறைந்துவிட்டது. முதல் தடவையாக வடக்கில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். 

எனவே தமிழ் மக்கள் இன்று இனவாதத்தில் இருந்து விடுபட்டு இலங்கையர்கள் என்ற அடையாளத்தில் தமிழ் மக்கள் செயற்பட ஆரம்பித்து விட்டனர். பெரும்பாலான தமிழர்கள் அரசாங்கத்தை ஆதரிக்க ஆரம்பித்து விட்டனர்.

என்னை பொறுத்த வரையில் யாழ்ப்பணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய அங்கஜனுக்கும் அமைச்சு பதவி கொடுக்க வேண்டும், கிழக்கில் இருந்து தெரிவாகிய அதாவுல்லாவுக்கும் அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழ் பேசும் மக்கள் மனங்களை வெற்றி கொண்டு இலங்கையர்கள் என்ற இணைந்த பயணத்தை முன்னெடுக்க முடியும் என்றார்.

No comments:

Post a Comment