முன்னாள் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் மக்கள் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தம்! - News View

About Us

About Us

Breaking

Saturday, August 22, 2020

முன்னாள் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் மக்கள் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தம்!

முன்னாள் தவிசாளர் AMM நௌஷாட், மக்கள் ...
சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எம்.எம்.நௌஷாட், அக்கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். அத்துடன், கட்சி சார்ந்து அவர் வகித்த பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் நலன்களுக்கு எதிராகவும், நெறிமுறைகளை மீறி செயற்பட்டமையினாலுமே அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார். கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நௌஷாட்டின் பேச்சுக்களும் செயற்பாடுகளும் கட்சிக்குப் பாதகமாக அமைந்ததனாலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கு, கட்சி யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே, அவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment