புகையிரத திணைக்களத்தின் நாளாந்த வருமானம் தற்போது படிப்படியாக அதிகரிப்பு - News View

Breaking

Post Top Ad

Sunday, August 23, 2020

புகையிரத திணைக்களத்தின் நாளாந்த வருமானம் தற்போது படிப்படியாக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து குறைவடைந்த புகையிரத திணைக்களத்தின் நாளாந்த வருமானம், தற்போது படிப்படியாக அதிகரித்து வருவதாக, புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெனாண்டோ தெரிவித்தார்.

நாளாந்தம் தூரப் பயண சேவையை பயன்படுத்தும் பயணிகள் மூலமே அதிகளவான வருமானத்தை புகையிரத திணைக்களம் பெற்று வந்திருந்ததோடு, கடந்த காலத்தில் குறைந்து காணப்பட்ட தூர பயணிகளின் வருகையானது தற்போது படிப்படியாக மீண்டு வருவதாகவும், அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னரான காலப்பகுதியில் புகையிரத திணைக்களத்தின் நாளாந்த வருமானம் 16 முதல் 18 மில்லியன் ரூபாவுக்கு இடையில் காணப்பட்டதாக, அவர் தெரிவித்தார்.

ஆயினும், கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, அதன் வருமானம் ஆரம்பக் கட்டத்தில் 5 மில்லியன் ரூபாவாக குறைவடைந்த நிலையில், தற்போது புகையிரத திணைக்களத்தின் நாளாந்த வருமானம் 6 - 8 மில்லியன் ரூபாவுக்கு இடையில் காணப்படுவதாக, அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad