லெபனான் பெய்ரூட்டில் பயங்கர குண்டு வெடிப்பு : அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 4, 2020

லெபனான் பெய்ரூட்டில் பயங்கர குண்டு வெடிப்பு : அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பு

லெபனான் பெய்ரூட்டில் பயங்கர வெடிவிபத்து: அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பு
லெபனான் பெய்ரூட் துறைமுக பகுதியில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு ஏற்பட்டதில், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் துறைமுக பகுதியில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. 

இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் குலுங்கின. இடிபாடுக்குள் மக்கள் சிக்கியுள்ளது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் மக்கள் ரத்தம் சிந்தியபடி ஓடிய காட்சிகளும் வெளியாகியுள்ளன.

2005 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் ரஃபிக் ஹரிரி கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு வௌியாகவுள்ள நிலையில் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

நகரின் துறைமுகப் பகுதியில் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இதேவேளை, இரண்டாவது குண்டு வெடிப்பு சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குண்டு வெடிப்பில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் வௌியிட்டுள்ளனர். இணையத்தில் வௌியிடப்பட்டுள்ள காணொளியில் பாரிய புகைமூட்டம் காணப்படுவதுடன், சேதங்கள் ஏற்பட்டுள்ளமையும் பதிவாகியுள்ளன.

கார்க்குண்டு மூலம் ஹரிரி கொலை செய்யப்பட்ட வழக்கில், நான்கு சந்தேகநபர்களுக்கு எதிரான தீர்ப்பை வழங்க ஐக்கிய நாடுகள் சபையின் தீர்ப்பாயம் தயாராகவுள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நான்கு சந்தேகநபர்களும் ஈரானிய ஆதரவுடைய ஹிஸ்புல்லா குழு உறுப்பினர்களாவர். அவர்கள் தமக்கும் ஹரிரியின் கொலைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தீர்ப்பு எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வௌியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஹரிரியின் இல்லத்தில் இரண்டாவது குண்டு வெடிப்பு இடம்பெற்றிருக்கக்கூடும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டு வெடிப்பிற்கான காரணம் இதுவரை வௌியாகவில்லை.

No comments:

Post a Comment