
சீனாவின் செயலியான டிக்டொக்கை தடை செய்வது குறித்து பரிசீலிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
லடாக் எல்லைப் பகுதியில், கடந்த ஜூன் மாதம் 15-ம் திகதி இந்திய - சீன ராணுவத்தினர் இடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் இறந்தனர். இதனால் எல்லையில் போர்ப் பதற்றம் ஏற்பட்டது.
எல்லையில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, சீனப் பொருட்களை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்றும் சீன நிறுவனங்களின் செல்போன் செயலிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தன.
அதன்படி, தேச நலனுக்கு எதிராகவும் தனிநபர் தரவுகள் பகிரப்படும் அபாயம் இருப்பதாகக் கூறி டிக்டொக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது.
இந்த நிலையில், சீனாவின் செயலியான டிக்டொக்கை தடை செய்வது குறித்து பரிசீலிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, கொரோனா வைரஸை பரப்பியதாக கூறி, சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருக்கிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் உருவாகி உள்ளது.
இந்த நிலையில், சீனாவின் செயலியானா டிக்டொக்கை தடை செய்ய உள்ளதாக டிரம்ப் கூறி இருக்கிறார். டிக்டொக்கிற்கு பதிலாக வேறு மாற்று செயலியை உருவாக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, டிக்டொக் நிறுவனத்தின் அமெரிக்க செயல்பாடுகளை மட்டும் வாங்க மைக்ரோசொப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் ஒரு செய்திகள் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment