
சர்வதேச காணாமல் போனவர்கள் தினத்தை முன்னிட்டு பாகிஸ்தானுக்கு எதிராக பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் போராட்டங்கள் நடைபெற்றன.
சர்வதேச காணாமல் போனவர்களின் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. போர், உள்நாட்டு மோதல் மற்றும் ஏனைய காரணங்களினால் காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டிக் கொள்வதற்கான ஒரு முயற்சியாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி பாகிஸ்தான் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வரும் சுதந்திர பலுசிஸ்தான் இயக்கம் சார்பில் பிரிட்டனில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பிரதமர் போரிஸ் ஜான்சனின் அலுவலக இல்லத்திற்கு வெளியே நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் பலர் பங்கேற்றனர். அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி, வரிசையாக நின்று பாகிஸ்தான் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
இதேபோல், லண்டனில் உள்ள பாராளுமன்றத்தின் முன்பு சிந்தி பலூச் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
நியூயோர்க்கில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுபான்மை சமூகங்களின் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். சிறுபான்மையினருக்கு எதிராக பாகிஸ்தான் அரசின் ஒடுக்குமுறை மற்றும் அட்டூழியங்களை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment