நெஞ்சை விட்டு நீங்கா நிறைவான நன்றிகள் எனது அன்பின் மட்டக்களப்பு வாழ் பொதுமக்களே! - முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் - News View

About Us

About Us

Breaking

Friday, August 7, 2020

நெஞ்சை விட்டு நீங்கா நிறைவான நன்றிகள் எனது அன்பின் மட்டக்களப்பு வாழ் பொதுமக்களே! - முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்

ஒரு லீற்றர் பெற்றோல் கூட எனது ...
நடந்து முடிந்துள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மரச் சின்னத்தில் இலக்கம் இரண்டில் போட்டியிட்ட என்னை பெருமளவிலான விருப்பு வாக்குகளைத் தந்து அமோக வெற்றியீட்டச் செய்தமைக்காக இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதும் தேர்தலில் போட்டுயிட்டு வெற்றி பெற்றுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாபிழ் நஸீர் அஹமட்.

ஏறாவூர், கல்குடா, காத்தான்குடி பிரதேசங்களிலிருந்து பெருமளவிலான முஸ்லிம் சகோதரர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் பரவலாக வாழுகின்ற கிறிஸ்தவ, தமிழ் சகோதரர்களும் தங்கள் அன்பின் அடையாளமாக விருப்பு வாக்கினைத் தந்து எனது பெரு வெற்றிக்குப் பங்களிப்பு செய்தமையானது நெஞ்சத்தில் நீங்கா இடத்ததைப் பெற்றுள்ளது.

இவ்வெற்றியை உங்களது வெற்றியாகவே கருதுகின்றேன். மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்றப் பிரதிநிதி என்ற வகையில் அனைத்துப் பிரதேசங்களுக்கும் என்னாலான சேவைகள் தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

எனவே மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து மக்களும் அபிவிருத்திப் பயணத்தில் ஒன்றாகக் கைகோர்ப்போம்.

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்

No comments:

Post a Comment