அனைவரும் தோல்வி கண்டுள்ளோம், கட்டாயம் விருப்பு வாக்குமுறை ஒழிக்கப்பட வேண்டும் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால - News View

About Us

About Us

Breaking

Friday, August 21, 2020

அனைவரும் தோல்வி கண்டுள்ளோம், கட்டாயம் விருப்பு வாக்குமுறை ஒழிக்கப்பட வேண்டும் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

பாராளுமன்றத்தில் என் மீதும் அடி ...
நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்பொன்றை உருவாக்குவதில் அனைவரும் தோல்வி கண்டுள்ளோம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவரும்போது கட்டாயம் விருப்பு வாக்குமுறை ஒழிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், நாட்டின் எதிர்காலத்தை நோக்கியதாகவும் தொலைநோக்கு பார்வை கொண்டதாகவும் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் அமைந்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர் முன்வைத்த சுபீட்சத்தின் நோக்கு மற்றும் தற்போதைய அவரது கொள்கைப் பிரடனம் என்பன ஒரே பார்வை கொண்டதாக அமைந்துள்ளது.

நாடு இன்று முகங்கொடுத்துள்ள சமூக, அரசியல், பொருளாதார பிரச்சினைகளை வெற்றி கொள்ள நாட்டின் அனைத்து பிரஜைகளும் பொறுப்புகள் மற்றும் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.

இந்நாடின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதற்கான தெளிவான நோக்கு ஜனாதிபதியிடம் உள்ளது. இந்த பாராளுமன்றில் அதிகமாக படித்தவர்களும், தொழில் வாண்மைமிக்கவர்களும் உள்ளனர். ஜனாதிபதியின் நோக்கை அடைந்து கொள்ள இவர்கள் அனைவரின் உதவிகளையும் பெற்று முன்னோக்கி பயணிக்க முடியும்.

வரலாற்றில் எமது நாட்டுக்கு இருந்த பெருமையை நாம் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். எதிர்கால பம்பரையை பலத்துறையில் மிளரவைக்க எமது கடமைகளை சரியாக செய்ய வேண்டும். அதற்காக நாட்டின் அரசியல் கலாசாரத்தில் பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment