அங்கஜனின் நியமனம் சுதந்திரக் கட்சிக்கு கிடைத்த பெரும் கௌரவம் - தயாசிறி சபையில் புகழாரம் - News View

About Us

About Us

Breaking

Friday, August 21, 2020

அங்கஜனின் நியமனம் சுதந்திரக் கட்சிக்கு கிடைத்த பெரும் கௌரவம் - தயாசிறி சபையில் புகழாரம்

யாழ். மாவட்டத்திலிருந்து முதன் முறையாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தெரிவாகி குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதாக சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “பிரதிக் குழுக்களின் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் அவர்களே நீங்கள் அந்த ஆசனத்தில் வீற்றிருக்கும் போது பேசக் கிடைத்தமையை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன்.

முதல் தடவையாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத் தேர்தல் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து தெரிவானமை எனக்கு பெருமிதமளிக்க கூடிய விடயமாகும்.

அது நாட்டுக்கும் பாரிய பாக்கியமாகும். தேசியக் கட்சியொன்றிலிருந்து போட்டியிட்டு வடக்கிலும் கிழக்கிலும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவானமையையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். 

உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் என்ற வகையில் நன்றிகளை கூறிக் கொள்கின்றேன். 

அத்துடன் பிரதித் தவிசாளராக நீங்கள் நியமிக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment