டிசம்பர் வரையான வரவு செலவு கணக்கறிக்கை நாளை பாராளுமன்றில் முன்வைப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, August 26, 2020

டிசம்பர் வரையான வரவு செலவு கணக்கறிக்கை நாளை பாராளுமன்றில் முன்வைப்பு

Full Budget Speech - 2019 ::. Latest Sri Lanka News
இவ்வருடத்தின் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்கான அரசாங்கத்தின் வரவு செலவுகள் தொடர்பான இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

இதற்கமைய, நாளை (27) முற்பகல் 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதோடு, குறித்த இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான விவாதம் நாளையும் நாளை மறுதினமும் (28) இடம்பெறும் என, வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

குறித்த இரு தினங்களிலும் முற்பகல் 9.30 மணியிலிருந்து பிற்பகல் 6.30 மணி வரை இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, புதிய அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை கூட்டம் இன்று (26) பிற்பகல் 4.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

அமைச்சரவை கூட்டம், வாரம் தோறும் ஒவ்வொரு புதன்கிழமையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையின் கீழ் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad