8 லட்சத்து 54 ஆயிரத்து 246 பேர் பலி - திணறும் உலக நாடுகள் - News View

Breaking

Post Top Ad

Monday, August 31, 2020

8 லட்சத்து 54 ஆயிரத்து 246 பேர் பலி - திணறும் உலக நாடுகள்

கொரோனா தாக்கம்.. திணறும் உலக நாடுகள்..!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 54 ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் \ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 54 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 56 லட்சத்து 22 ஆயிரத்து 351 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 68 லட்சத்து 45 ஆயிரத்து 270 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 182 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 1 கோடியே 79 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 54 ஆயிரத்து 246 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்
அமெரிக்கா - 1,87,732
பிரேசில் - 1,21,515
இந்தியா - 64,469 
மெக்சிகோ - 64,158
இங்கிலாந்து - 41,501
இத்தாலி - 35,483
பிரான்ஸ் - 30,635
ஸ்பெயின் - 29,094
பெரு - 28,788
ஈரான் - 21,571

No comments:

Post a Comment

Post Bottom Ad