69 பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை ஒன்லைன் ஊடாக தமது தகவல்களை பதிவு செய்துள்ளனர் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 13, 2020

69 பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை ஒன்லைன் ஊடாக தமது தகவல்களை பதிவு செய்துள்ளனர்

எம்.பிக்களை ஒன்லைனில் பதிவு செய்யுயுமாறு பாராளுமன்றம் அறிவிப்பு-Online Registration for the Newly Elected MPs
பாராளுமன்ற செயலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்லைன் முறையினை பயன்படுத்தி இதுவரை புதிய பாராளுமன்றத்தின் 69 உறுப்பினர்கள் தங்களது விபரங்களை பதிவு செய்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் தகவல்களை ஒன்லைன் முறையில் (Online Registration System) பெற்றுக் கொள்ளும் முறையொன்று பாராளுமன்ற செயலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து உறுப்பினர்களும் தமது தகவல்களை வழங்குவதற்கு பாராளுமன்றத்தின் இணையத்தளத்துக்கு பிரவேசித்து ஒன்லைன் விண்ணப்பப்படிவத்தை பூரணப்படுத்த முடியும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க அறிவித்தல் விடுத்துள்ளார்.

இந்த தகவல் வழங்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 தொற்று நோய் நிலைமை காரணமாக தற்பொழுது பாராளுமன்றத்தினுள் காணப்படும் தகவல் தொழிநுட்ப முறைமைகளை பயன்படுத்தி ஒன்லைன் மூலம் தகவல்களை திரட்டுவதாகவும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

அதேபோன்று உறுப்பினர்களின் வசதி கருதி இந்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பாராளுமன்றத்துக்கு வருகை தராமல் தேர்தல் தொகுதிகளில் இருந்தே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என தம்மிக தஸநாயக்க மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய, ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் https://registration.parliament.lk எனும் இணைய பக்கத்திற்கு பிரவேசித்து உரிய கடவுச் சொல்லை பயன்படுத்தி இந்த விண்ணப்பபடிவத்தை பெற்றுக் கொள்ள முடியும். இந்த கடவுச் சொல் தொடர்பில் அறிவுறுத்துவதற்கு பாராளுமன்ற பணியாட்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கடந்த 11 ஆம் திகதி அலரி மாளிகையில் உத்தியோகபூர்வமாக பணிகளைப் பொறுப்பேற்று சிறிது நேரத்தின் பின்னர் இந்த ஒன்லைன் விண்ணப்பப்படிவத்தில் தனது தகவல்களைப் பூரணப்படுத்தி பராளுமன்ற செயலகத்திடம் ஒப்படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment