5000 கிலோ கிராம் பழுந்தடைந்த மீன்களை கொண்டு சென்ற லொறி மடக்கிப்பிடிப்பு! - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 25, 2020

5000 கிலோ கிராம் பழுந்தடைந்த மீன்களை கொண்டு சென்ற லொறி மடக்கிப்பிடிப்பு!

5000 கிலோ பழுந்தடைந்த மீன்களை கொண்டு ...
பழுந்தடைந்த நிலையில் உள்ள சுமார் 5000 கிலோ கிராம் மீன்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றை புத்தளம் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று மடைக்கிப் பிடித்துள்ளனர்.

இன்று மாலை கொழும்பிலிருந்து புத்தளம் நகரினூடாக அனுமதிப்பத்திரமின்றி மன்னாருக்கு கொண்டு செல்லப்பட்ட போது குறித்த லொறி புத்தளம் பொதுச் சுகாதார ஊழியர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டது.

குறித்த லொறி புத்தளம் நகரினூடாக சென்றபோது துர்நாற்றம் வீசியதன் காரணமாக குறித்த லொறி மடக்கிப்பிடிக்கப்பட்டு சோதனைகளை முன்னெடுத்த வேளையில் மனித பாவனைக்கு உகந்ததல்லாத சுமார் 5000 கிலோ கிராம் நிறையுடைய மீன்கள் காணப்பட்டதாக தெரிவித்தனர்.

இம்மீன்கள் 3 நாட்களுக்கு முன்னரே பழுதடைந்திருக்கலாம் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதன்போது பழுதடைந்த மீன்களைக் கொண்டு சென்ற நபரின் விருப்பத்திற்கு இணங்க அனைத்து மீன்களும் புத்தளம் நகர சபை, குப்பைமேட்டில் வைத்து அகற்றப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர் என். சுரேஸ் தெரிவித்தார்.

சந்தேக நபரின் விருப்பத்திற்கிணங்க மீன்கள் அகற்றப்பட்டமையால் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.
5000 கிலோகிராம் பழுந்தடைந்த மீன்களை ...

No comments:

Post a Comment