40ஆவது இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 26, 2020

40ஆவது இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

40ஆவது இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த-Susil Premajayantha Sworn in As State Minister
பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

கல்விச் சீர்திருத்தங்கள்‌, திறந்த பல்கலைக்கழகங்கள்‌ மற்றும்‌ தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சராக, சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த ஓகஸ்ட் 12ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வில்,  28 அமைச்சுகளை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட 25 பேர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதோடு, 39 இராஜாங்க அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தனர்.

ஏற்கனவே வர்த்தமானிப்படுத்தப்பட்ட அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் பட்டியலுக்கு அமைய, 40 ஆவது இராஜாங்க அமைச்சராக, சுசில் பிரேமஜயந்த தற்போது பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment