ரணிலிடம் 4 மணி நேரம் அகிலவிடம் 2 மணி நேரம் வாக்குமூலம் - News View

Breaking

Post Top Ad

Monday, August 31, 2020

ரணிலிடம் 4 மணி நேரம் அகிலவிடம் 2 மணி நேரம் வாக்குமூலம்

ரணிலிடம் 4 மணி நேரம் அகிலவிடம் 2 மணி நேரம் வாக்குமூலம்-Ranil Wickremesinghe Left from Easter Sunday Attack PCoI
முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க 4 மணி நேர வாக்குமூலம் வழங்கிய பின்னர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார்.

இன்று (31) முற்பகல் 10.00 மணியளவில் குறித்த பிரிவில் ஆஜரான அவர், வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இதேவேளை, இன்று முற்பகல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சுமார் 2 மணி நேரத்திற்கும் அதிக நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad