ஹோட்டல் அறையில் 16 வயது இளம் பெண்ணை சீரழித்த 30 ஆண்கள் - போராட்டத்தில் குதித்த இஸ்ரேல் மக்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, August 24, 2020

ஹோட்டல் அறையில் 16 வயது இளம் பெண்ணை சீரழித்த 30 ஆண்கள் - போராட்டத்தில் குதித்த இஸ்ரேல் மக்கள்

ஓட்டல் அறையில் இளம்பெண்ணை சீரழித்த 30 ஆண்கள் - போராட்டத்தில் குதித்த இஸ்ரேல் மக்கள்
இஸ்ரேல் நாட்டில் விடுமுறையை கழிக்கச் சென்ற இளம் பெண் ஒருவரை, அவரது ஹோட்டல் அறையில் வைத்து 30 ஆண்கள் சீரழித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் ஈலத் நகரில் 16 வயது இளம் பெண் ஒருவரை ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து 30 ஆண்கள் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு உள்ளனர். இந்த கொடூர சம்பவம் கடந்த 20ம் திகதி நடைபெற்றது. அரசியல் வட்டாரத்திலும் இந்த சமபவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பொலிசார் இந்த விவகாரம் தொடர்பாக பலரையும் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் தங்கியிருந்த ஹோட்டல் அறையின் கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் பொலிசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

சிசிடிவி கேமரா காட்சியில் பெண்ணின் அறைக்கு வெளியே ஆண்கள் கூட்டம் வரிசையாக நின்ற காட்சிகளும் பதிவாகியுள்ளது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக யாரும் நேரடி சாட்சியம் அளிக்கவில்லை.

முக்கிய குற்றவாளியாக கருதப்படும் 27 வயது இளைஞரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணே தங்களை அழைத்ததாகவும், அவர் மதுபோதையில் இருந்துள்ளார் எனவும், அறைக்கு வெளியே வரிசையில் நின்றிருந்த ஆண்களே அதற்கு சாட்சி என கைதான அந்த 27 வயது இளைஞர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமது கண்டனத்தைப் பதிவுசெய்த பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இது அதிர்ச்சி அளிக்கிறது. வேறு வார்த்தை இல்லை. இது சிறுமிக்கு எதிரான குற்றம் மட்டுமல்ல, இது மனித குலத்திற்கு எதிரான குற்றமாகும். பொறுப்பானவர்கள் நீதிக்கு முன்பு கட்டாயம் கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறுமிக்கு ஆதரவாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் சிறுமிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். டெல் அவிவின் ஹபீமா சதுக்கத்தில் நூற்றுக்கணக்கானவர்களும், இஸ்ரேல் முழுவதும் 30 க்கும் மேற்பட்ட பகுதிகளில் சிறுமிக்கு ஆதரவாக போராட்டம் வெடித்துள்ளது. 

சிறுமி தற்போது தனது குடும்பத்தினருடன் உள்ளார், மேலும் அவர் பொதுமக்களின் ஆதரவால் ஊக்கத்துடன் இருப்பதாக கூறினார்.

இது தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர் கூறுகையில், பொலிசாருடன் எங்கள் ஹோட்டல் ஒத்துழைக்கிறது. அந்தப் பெண்ணுக்கு நடந்த சம்பவம் குறித்து வருந்துகிறேன். நாங்கள் ஒரு ஹோட்டல் நடத்துகிறோம், கல்வி நிறுவனம் அல்ல. எல்லா கேமராக்களையும் சோதித்தோம். ஆனால் சம்பந்தப்பட்ட காட்சிகள் இல்லை. துரதிர்ஷ்டவசமாக, எந்த ஹோட்டலிலும் இது நடந்திருக்கலாம், அறைகளுக்குள் என்ன நடக்கிறது என்பதை அறிய எங்களுக்கு வழி இல்லை என கூறினார்.

No comments:

Post a Comment