இலங்கையில் இதுவரை ஒன்றரை இலட்சம் PCR பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா தகவல் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 25, 2020

இலங்கையில் இதுவரை ஒன்றரை இலட்சம் PCR பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா தகவல்

இலங்கையில் இதுவரை 1 இலட்சத்து 50 ஆயிரம் PCR பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த தகவலை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வெளியிட்டுள்ளார். 

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 2,753 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதேநேரம் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 2,077 ஆக உயர்வடைந்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 665 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் சந்தேகத்தின் பேரில் 101 பேர், வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment