ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகத்தை மூடுமாறு அமெரிக்கா உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 22, 2020

ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகத்தை மூடுமாறு அமெரிக்கா உத்தரவு

ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவிட்டுள்ளதாக பீஜிங்கில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் மோதல் நீடித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவியதற்கு பின் இந்த மோதல் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா சீனா மீதும், சீனா அமெரிக்கா மீதும் குற்றம் சாட்டி வருகின்றன.

சீனாவால் அச்சுறுத்தப்படும் அண்டை நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த விசயத்தில் அமெரிக்கா மீது சீனா கடும் கோபத்தில் உள்ளது.

இந்நிலையில் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தின் முன்பு வைத்து முக்கியமான ஆவணங்கள் எரிக்கப்பட்டதாக வெளியான தகவல் குறித்து பொலிசார் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் விளக்கம் அளித்து வருவதாக அமெரிக்கா மீடியாக்களில் செய்தி வெளியானது.

இதற்கிடையில் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூடுவதற்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளதாக பீஜிங்கில் இருந்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்கா சார்பில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment